• மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் பயிற்சி வகுப்பு


 ·        தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள  மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு  வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
தலைமையில்  நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில்  தேர்தல் பணிகளில் ஈடுபடவதற்காக 144 மண்டல அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர், ஒரு காவலர் மற்றும் ஓரு உதவியாளர் இருப்பார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்கள்  குழு  விவரம்

எண். மற்றும் சட்டமன்ற தொகுதி

மண்டல அலுவலர்கள் குழு எண்ணிக்கை

கூடுதலாக மண்டல அலுவலர்கள் குழு எண்ணிக்கை

மொத்த மண்டல அலுவலர்கள் குழு எண்ணிக்கை.

40.காட்பாடி

23

2

25

43.வேலூர்

25

2

27

44.அணைக்கட்டு

30

2

32

45.கீ.வ.குப்பம் (தனி)

25

2

27

46.குடியாத்தம்(தனி)

31

2

33

மொத்தம்

134

10

144

இவர்களில் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கான  மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் /  மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில்  மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவிற்கு, வாக்குப்பதிவு குழு வருகை நிலை, மாதிரி வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு தொடக்கம், வாக்குப்பதிவு நிலவரங்கள், வாக்குப்பதிவு நிறைவு  மற்றும்  ECINET மொபைல் செயலியில் பதிவு  செய்தல் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய நாள் மண்டல அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

                வாக்குச்சாவடிக்குரிய பணியாளர்களின் நியமன ஆணைகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து பயிற்சி மையத்தில் பெற்று கொள்ள வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும். அவை அந்தந்த வாக்குச்சாவடிக்கு உரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பதை வரிசை எண்களை வைத்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

                வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்களை ஒப்புகை பெற்று வழங்க வேண்டும்.  வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசை எண்களை சரி பார்த்து உறுதிப்படுத்திய பின்னரே வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து பட்டியல் வைத்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் அன்று அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களின் வருகை,  தேவையான வாக்குப்பதிவு பொருட்கள் இருப்பு, வாக்குச்சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள், நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் கேமராக்கள் பணியாளர்கள் வருகை ஆகியவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். வெப் கேமரா சரியான நிலையில் அனைத்து வாக்குப்பதிவு நடைமுறைகளையும் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

                 மேற்கண்ட தகவல்களில் ஏதேனும் தாமதமோ அல்லது விடுபாடோ இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர் அல்லது வட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

தேர்தல்  நாள்  அன்று மண்டல அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

                வாக்குப்பதிவு நாளன்று விடியற்காலை அனைத்து வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு அலுவலர்களை தயார்படுத்த வேண்டும். அனைத்து வாக்குச் சுவடுகளிலும் நேரில் சென்று பார்வையிட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய நேரத்தில் முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு துவங்கப்பட வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு  இயந்திரங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் நேரடியாக சென்று தவறாமல் பார்வையிட வேண்டும்.

                வாக்குப்பதிவு நிறைவடையும் வரை அதிக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தனி கவனம் செலுத்தி சீரான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

தொடர்ந்து மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் VVPAT இயந்திரங்களை வாக்குச்சாவடி மையத்தில் பொருத்துதல், அவற்றிற்கு தேவையான பேட்டரிகளை பொருத்துதல்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட வேண்டிய இடத்தின் அமைப்பு , வாக்குப்பதிவிற்கு முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள சீல்களை அகற்றி மாதிரி வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவினை தொடங்குவது, வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களை  சீல் வைப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில்  கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கரன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.