• வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி - விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

·        வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.

    வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் விஐடி பல்கலைகழகம் சுகாதார துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள புரிந்துணர்வு  ஒப்பந்தம்  மேற்கொண்டுள்ளன.

     வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் வேலூர்  கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாலமன்சதீஷ்குமார் மற்றும் விஐடி பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர்  கையெழுத்திட்டனர்.

   தொடர்ந்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

     இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் விஐடி பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து, சுகாதார துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க இணைந்து செயல்பட முடியும்.

     மேலும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி மற்றும் அறிவியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிப்பதும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

     நிகழ்வில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி நாட்டிலேயே சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. உலக அளவில் முதல் முறையாக இந்தியாவில் செய்யப்பட்ட சில விஷயங்கள் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் உள்ளன.

            1948-ல் உலகின் முதல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவில் முதல் செவிலியர் கல்லூரி 1946-ல் தொடங்கப்பட்டது. 1961-ல் இந்தியாவின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1971-இல் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1986-இல் இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி நாட்டிலேயே எப்போதும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்றார்.

     நிகழ்வில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி  முதல்வர் சாலமன்சதீஷ்குமார் பேசும்போது, “இந்தியாவில் உயர்கல்வியில் முன்னணியில் உள்ள விஐடி பல்கலைகழகம் பயோ இன்ஜினியரிங், பயோ இன்ஃபர்மேடிக்ஸ், பயோமெட்டீரியல்ஸ் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த ஒத்துழைப்பு மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார தீர்வுகளை வழங்க முடியும் என்றார்.

     நிகழ்வில் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி இயக்குநர் பிஜு ஜார்ஜ்,  விஐடி துணைதலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணைதுணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், சுகாதார அறிவியல் மற்றும் பொறியியல் துறை முதன்மையர் கீதா மணிவாசகம் மற்றும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி (ராணிப்பேட்டை வளாகம்) இணைஇயக்குநர் தீபக் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.