• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் -
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் 768 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நலத்துறை. மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 768 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நல துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் இயக்கதிறன் குறைபாடுடைய 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.31,500/- மதிப்பிலான சக்கர நாற்கலிகளும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிக்கு ரூ.7300/- மதிப்பில் சிறப்பு நாற்காலியும் என மொத்தம் 3 மாற்று திறனாளிகளுக்கு ரூ.38,800/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், அறிவுசார் குறைபாடுடைய 6 மாற்று திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
மேலும் குறை தீர்வு நாள் கூட்டத்தில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி உள்வட்டம், நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/- நிதியுதவிக்கான ஆணையினை அவரின் குடும்பத்தாரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment