• அணைக்கட்டு தொகுதி வளர்ச்சி திட்டப் பணி அடிக்கல் நாட்டு விழா.
· அணைக்கட்டு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா
· மாற்று திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஏ.பி.நந்தகுமார்,எம்.எல்.ஏ.
வேலூர் மாவட்டம், வேலூர், அணைக்கட்டு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளியின் கோரிக்கையை ஏ.பி.நந்தகுமார்,எம்.எல்.ஏ., உடனடியாக நிறைவேற்றினார்.
அணைக்கட்டு தொகுதி, வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதுப்பேரி, குப்பம்-பழவேரி பகுதிகளில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைக்கான பணியை ஏ.பி.நந்தகுமார்,எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வேலூர் ஒன்றிய செயலாளர் சி.எல்.ஞானசேகரன், துணைசெயலாளர் காசி, சதுப்பேரி ஊராட்சி தலைவர் சுஜாதா, குப்பம் ஊராட்சி தலைவர் சூரியகலா நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொரப்பாடி பகுதி அரியூரில் ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை கட்டும் பணி, அரியூர் புதுமை நகரில் ரூ.7.5 லட்சத்தில் புதிய பஸ் நிறுத்தம், ரூ.1 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் ஏ.பி.நந்தகுமார்,எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். அப்போது ஏ.ஜி.நகரை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் புதிய பஸ் நிறுத்தம், சாலை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு நந்தகுமார்,எம்.எல்.ஏ, பணிகள் முடிந்துவிட்டது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் சாலை அமைத்து தருகிறேன் என்றார்.
ஆவாரம்பாளையத்தில் ரூ.69 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசுகையில்,
வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தையல் மெஷின்களை பயனாளிகளுக்கு வழங்க உள்ளேன். தகுதியான பயனாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றார். விழாவில் தொரப்பாடி பகுதி செயலாளர் ஆர்.கே.ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அல்லாபுரம் பகுதி பாகாயம் எம்.ஜி.ஆர் நகரில் ரூ.14 லட்சத்தில் ரேஷன் கடை, ரூ.7.5 லட்சத்தில் பள்ளஇடையம்பட்டியில் பஸ் நிறுத்தம், ரூ.7 லட்சத்தில் குளவிமேட்டில் பொதுவிழா மேடை, பாகாயம் எம்.ஜி.ஆர் நகரில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.5.94 கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
எம்.ஜி.ஆர் நகரில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, பொதுக்கழிப்பிட வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.
விழாவில் அல்லாபுரம் பகுதி செயலாளர் சி.எம்.தங்கதுரை, 57-வது வட்ட செயலாளர் விநாயகம், மாநகராட்சி கவுன்சிலர் ஆண்டாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆவாரம்பாளைத்தில் மாற்று திறனாளியான சக்திவேல் என்பவர், தனக்கு பேட்டரி வைத்த வாகனம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட ஏ.பி.நந்தகுமார்,எம்.எல்.ஏ., அங்கிருந்து மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பேட்டரி வைத்த வாகனம் தகுதியான பயனாளிக்கு உடனே வழங்க வேண்டும் என்றார். அதன்படி மனு பெற்ற 2 மணி நேரத்தில் சக்திவேலுவுக்கு மாற்று திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பேட்டரி வைத்த வாகனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment