• குடியாத்தம் சட்டமன்ற தொகுதி நலத்திட்ட உதவிகள்.

  • குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,341 பயனாளிகளுக்கு ரூ.7.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பாபு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,341 பயனாளிகளுக்கு ரூ.7.49 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன் வழங்கினர்.

நலத்திட்ட உதவிகள் விவரம்

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் வட்டம் மற்றும் பேரணாம்பட்டு வட்டங்களை உள்ளடக்கிய சைனகுண்டா, கல்லப்பாடி,  தாட்டிமாணப்பல்லி,  இராமாலை, ரங்கசமுத்திரம், கருணீகசமுத்திரம், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளை சார்ந்த 624 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், பேரணாம்பட்டு வட்டம், குடியாத்தம் வட்டம்,  கீ.வ.கு ப்பம் வட்டத்தை சார்ந்த கள்ளூர், சீவூர் மற்றும் ஆம்பூர் வட்டத்தை சார்ந்த அகரம் சேரி ஆகிய கிராமங்களை சார்ந்த 717 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்த்தாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-ன் சிறப்பு திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் வழங்கப்பட்ட 1 இலட்சத்து 9 ஆயிரம் மனுக்களில் அதிகப்படியான மனுக்கள் வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் குறித்த கோரிக்கை மனுக்களாக இருந்தன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதி உடைய பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா சட்டமன்ற தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 624 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 48 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது. மேலும் 717 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் குடியாத்தம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தம் உயர்த்தி, ரூ.45 கோடி மதிப்பில் ஐந்து தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டடத்தை வழங்கி உள்ளார்கள். கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே பாலம் மற்றும் கரைகளில் சுற்றி சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு குடியாத்தம் நகரின் போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்களின் இயக்கத்தை குறைக்கும் வகையில் குடியாத்தம் நகரில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் குடியாத்தம் நகராட்சியில் அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

துதவிர  நம்முடைய மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 2,36,544 மகளிர் மாதம் ரூ.1000/ - பெற்று பயனடைந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் 34,000 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் 17,000 மாணவர்களும் மாதம் ரூ.1000/  பெற்று பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 40,418 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 24 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் சுமார் 36,000 க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கான சிகிச்சைகளை பெற்று பயனடைந்துள்ளனர். இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், நகர மன்றத் தலைவர்கள் எஸ்.சௌந்தரராஜன் (குடியாத்தம்), பிரேமா வெற்றிவேல் (பேரணாம்பட்டு), பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், துணைதலைவர் லலிதாடேவிட், குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர்கள் மனோஜ், நவீன், சங்கர் வட்டாட்சியர் சந்தோஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.