• வேலூர் மாவட்ட ஈர நில பாதுகாப்பு வன தீ தடுப்பு கூட்டம்.


 ·        வேலூர் மாவட்டத்தில் ர நில பாதுகாப்பு மற்றும்  வன தீ தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை பாதுகாப்பது மற்றும் வனப்பகுதிகளில் ஏற்படும் வன தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்  நடைபெற்றது.

ஈரநில பாதுகாப்பு :

தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள ஈர நிலங்களை கண்டறிந்து அவற்றை வரைபடமாக்கி அதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுத்தல், பல்லூயிர் பெருக்கத்தை அதிகரித்தல் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் அகியவற்றை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு ஈரநில இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.  ஈரநில  பாதுகாப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை கண்டறிந்து அவற்றை அளவீடு செய்து முறையாக பிரத்தியேக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக வனத்துறை, வருவாய் துறை, தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களை ஈடுபடுத்தி செயல்படுத்தி வருகிறது.

ஈரநிலங்கள் என்பது பொதுவாக இரு வகைப்படும். சமதள ஈர நிலங்கள் மற்றும் கடற்கரையோர ஈர நிலங்களாகும். நம்முடைய வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை சமதள ஈரநிலங்களே உள்ளன. இந்த  ஈர நிலங்களில் இயற்கையாக உருவான ஈர நிலங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஈர நிலங்கள் என இரண்டு வகைப்படும். இயற்கையாகவே அமைந்த ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஒரு வகையாகவும், மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்தேக்கங்கள், கோயில் குளங்கள், விவசாய நிலங்கள், பண்ணை குட்டைகள் மற்றொரு வகையாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் அதிகப்படியான வெள்ள பெருக்கின்போது ஏற்படும் பாதிப்புகள் குறையும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தேவைகள் பாதுகாக்கப்படும்.  ஈரநிலங்களில் உள்ள தாவரங்கள் திடக்கழிவுகளை தடுத்து நீர் மாசுபடுதலை குறைக்கும். ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் மண்ணின் வளம் மேம்படும். மேலும் விலங்குகள் மற்றும் பறவையினங்களுக்கு  பாதுகாப்பான வாழ்விடமாக இந்த ஈரநிலங்கள் விளங்கும்.

வேலூர் மாவட்டத்தில் 241 ஈரநிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 81  ஈரநிலங்கள் அளவிடு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 160 ஈரநிலங்களானது காட்பாடி மற்றும் வேலூர் பகுதிகளில் உள்ள ஈரநிலங்களாகும். இவற்றையும் விரைவில் அளவீடு செய்து  இணையத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் சம்மந்தப்பட் வனத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினர்.

வன தீ  தடுப்பு நடவடிக்கைகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள நிலப்பரப்பில் 94,000 ஹெக்டேர் வன பகுதியாக உள்ளது.  இந்த வனப் பகுதிகளில் பொதுவாக கோடை காலங்களில் வன தீ ஏற்படுவது உண்டு. னப்பகுதிகளில் காய்ந்த நிலையில் காணப்படும் மஞ்சம் புல்லில் ஏற்படும் தீயினால் எளிதில் பரவி அது காட்டு தீயாக பரவுகிறது.

வேலூர் மாவட்டத்தில் 65 இடங்கள் காட்டுத்தீ ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.  2025 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் மட்டும் 120 இடங்களில் வனத்தீ ஏற்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 44 இடங்களில் வனத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த வனத்தீயை தடுப்பதற்காக மாவட்ட வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக வனப்பகுதிக்குள் செல்லும் பொதுமக்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்வது தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. வனத்தீயை  கட்டுப்படுத்துவதற்காக வேலூர் மாவட்டத்தில் 102 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 3 மீட்டர் அகலத்தில் வனத்தீ தடுப்பு பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வனச்சரகர்கள் மற்றும் வன பாதுகாவலர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. மேலும் வனப்பகுதிகளில் தீ வைத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர்  வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வனத்துறையின் சார்பில்  சூழல் மேம்பாட்டு குழுவில் உள்ள  14 தனி நபர்களுக்கு தலா ரூ.20,000/- வீதம் ரூ.2,80,000/- கடனுதவிகளையும், 7 சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.2,00,000/- வீதம்  ரூ.14,00,000/- கடனுதவி என மொத்தம் ரூ.16,80,000/- மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார்., மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.