• ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நலத்திட்ட உதவிகள்

·        ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கிராமங்களை சார்ந்த 240 பயனாளிகளுக்கு ரூ.4.63 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைவேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், ஆம்பூர்  சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கிராமங்களை சார்ந்த 240 பயனாளிகளுக்கு ரூ.4.63 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அகரம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வழங்கினர்.

நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு ரூ.90,00,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 123 பயனாளிகளுக்கு ரூ.3,69,00,000/- மதிப்பிலான ஆதிதிராவிடர் நத்தம் பட்டா / பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டாக்களும், 75 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.1,01,800/- வீதம் ரூ.2,03,600/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 10 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.1,57,500/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளும் என மொத்தம் 240 பயனாளிகளுக்கு ரூ.4,62,61,100/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர், ஆம்பூர்  சட்டமன்ற உறுப்பினர்  வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.

கடந்த ஆறு மாதங்களாக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நடத்தி, அந்த முகாம்களில் வீட்டுமனைப் பட்டா,  புதிய மின்னணு குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவி தொகை கோரி மனு அளித்திருந்தனர். அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 240 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 62 இலட்சத்து 61 ஆயிரத்து 100 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  

தற்போது தொகுதி வாரியாக பட்டா, குடும்ப அட்டை, மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 2,94,000 பேர் மகளிர் உரிமைத் தொகை வாங்குறாங்க. அதேபோல கல்லூரியில் படிக்கும் 40,000 மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் உதவித்தொகை  பெற்று பயனடைந்து வருகின்றனர். .

அன்புக்கரங்கள் திட்டத்தின்கீழ் தாய், தந்தை அல்லது இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் 1000 ரூபாய்  3,400 குழந்தைகள் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.  அதேபோல் 40,400 குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.

       இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாற்று திறனாளிகள் நல துறை அலுவலர் பாபு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் .சுதாகர், ஹரி, வினோத், அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ர.சுதாபிரியா, அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.