• ஆந்திர மாநில எல்லை கிறிஸ்டியன் பேட்டை சோதனை சாவடி ஆய்வு.


 ·        தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /  மாவட்ட ஆட்சி தலைவர் ஆந்திர மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை காவல் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆவணங்களின்றி ரூ.50000/-கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.10000/-கு மேல் பரிசு பொருட்கள், சட்டத்திற்கு புறம்பாக கொண்டு வரப்படும் மதுபானங்கள் மற்றும் இதர போதை வஸ்துக்கள் ஆகியவற்றை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாகன சோதனைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் வேலூர் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் அண்டை மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள 6 காவல் சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ஆந்திர மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் உள்ள காவல் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்படும் வாகன தணிக்கை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரின் வாகன சோதனைகளை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் காவல் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும் காவல் சோதனை சாவடியில் உள்ள வாகன தணிக்கை பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இரவு நேர பணிகளில் உள்ள காவலர்கள் வாகனங்கள் சோதனை செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து காவல் சோதனை சாவடி அருகே இருந்த நிலை கண்காணிப்பு குழுவினர் ஆந்திர மாநிலத்திலிருந்து காட்பாடி வழியாக வேலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்பணிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 15.03.2026 அன்று மாலை முதல் 19.03.2026 அன்று மாலை வரை மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனைகளின்போது காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.7,23,000/- ரொக்கப்பணம், வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.7,39,000/-ரொக்கப்பணம் மற்றும் ரூ37,000/- மதிப்பிலான பொருட்கள், கீ..குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.5,43,000/- ரொக்கப்பணம். குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,41,000/- ரொக்கப்பணம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,06,000/- ரொக்கப்பணம் என மொத்தம் ரூ.24,52,000/-  ரொக்கப்பணமும்,  ரூ37,000/-மதிப்பிலான பொருட்களும் பறக்கும் படை குழு மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாறன், உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.