• எரிவாயு உருளைகளை கடத்தல் பொதுமக்கள் புகார் எண்.
· எரிவாயு உருளைகளை கடத்துவது அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றாலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0416-2252586 என்ற கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் விற்பனை செய்வதைக் கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் ஆகிய எரிவாயு நிறுவனங்களின் சார்பில் பொறுப்பு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவானது மருத்துவமனை, அரசு காப்பகங்கள், விடுதிகள், பள்ளி சத்துணவு, காலை உணவு திட்டம், அங்கன்வாடி மையங்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு உருளை மற்றும் வணிக எரிவாயு உருளை ஆகியவற்றின் விநியோகங்களை நாள்தோறும் கண்காணிக்கும்.
எரிவாயு சிலிண்டர்களை கள்ளத்தனமாக பதுக்கி வைக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எரிவாயு உருளைகளை கடத்துவது அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றாலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0416-2252586 என்ற கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பிளாஸ்டிக் கேன்களில் வழங்கக்கூடாது என்று எண்ணெய் வழங்கும் நிறுவனங்களின் மூலமாக பெட்ரோல் நிலைய பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment