• சின்னகீசகுப்பம் பால் குட ஊர்வலம்.


 ·        சின்னகீசகுப்பம் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் உலக அமைதிக்காக பால் குட ஊர்வலம் - சுவாமிகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு.

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி மதுரா சின்னகீசகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரர், பெரிய ஆண்டவர், சப்தகன்னிகள் ஆலய மண்டல அபிஷேகம் பூர்த்தி விழா மற்றும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இயற்கை வளங்கள் செழிக்கவும் வேண்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேளதாளங்கள் முழங்க பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பால் குடங்களை யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்து பின்னர் ஸ்ரீ முனீஸ்வரர், பெரிய ஆண்டவர், சப்தகன்னிகளுக்கு பாலபிஷேகம் செய்து தீபாராதணைகள் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.