• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

 ·        வேலூர்  மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 717  கோரிக்கை மனுக்களை பெற்றார்.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நலத்துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 717 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நல துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிக்கு தலா ரூ.3,285/- வீதம் காதொலி கருவி 3 பயனாளிகளுக்கு ரூ.9,855/- (ரூபாய் ஒன்பதாயிரத்து எண்ணூற்று ஐம்பத்து ஐந்து மட்டும்) மதிப்பில் காதொலி கருவியும், இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கு ரூ.105000/- (ரூபாய் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் மட்டும்) மதிப்பிலான சிறப்புச் சக்கர நாற்காலியும் (Neo – Bold) மற்றும் ரூ. 15,750/-  வீதம்  சக்கர நாற்காலி 8  பயனாளிகளுக்கு ரூ.1,26,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்து ஆறாயிரம் மட்டும்) மதிப்பிலும் ஆக மொத்தம் 12 மாற்று திறனாளிகளுக்கு ரூ.2,40,855/- (ரூபாய் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரத்து ஐம்பத்து ஐந்து மட்டும்) மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர்   வழங்கினார்.

 மேலும் நடைபெற்ற குறை தீர்வு நாள் கூட்டத்தில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுக்கத்தூர் மதுரா”ஓ”ராஜாபாளையம் பகுதியை சேர்ந்த செல்வன் யுவராஜ்  ஒடுக்கத்தூர் புண்ணிய தீர்த்த நதியில் மூழ்கி உயிரிழந்தமைக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து   ரூ.1,00,000/- நிதியுதவிக்கான ஆணையினை அவரின் குடும்பத்தாரிடம் மாவட்ட ஆட்சி தலைவர்  வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என்.மதுசெழியன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாறன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.