• வேலூர் எரிவாயு உருளை, பெட்ரோலிய பொருட்கள் இருப்பு கூட்டம்
· வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எரிவாயு உருளை, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து, தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது-
எரிவாயு உருளை இருப்பு விவரம், விற்பனை விவரம் மற்றும் பதிவு விவரங்களை HPCL BPCL & IOCL ஆகிய எரிவாயு நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு மற்றும் விற்பனை விவரத்தினை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வதோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ குற்றமாகும். எனவே, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். .
எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு உபயோகத்திற்காக பயன்படும் எரிவாயு உருளைகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணித்தும், கைப்பற்றுகை செய்து வழக்கு பதிவு செய்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனுமதியற்ற பகுதிகளில் எரிவாயு உருளைகள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வாட்ஸ் குழு ஏற்படுத்தி அதில் எரிவாயு தொடர்பான விவரங்களை எரிவாயு விநியோகிஸ்தர்கள் தெரியப்படுத்திட வேண்டும்.
எரிவாயு விநியோக கிடங்கு மற்றும் பெட்ரோல் / டீசல் விற்பனை நிலையங்களில் மேற்குறிப்பிட்ட அலுவலர்கள் திடீர்த் தணிக்கைகள் குறைபாடுகளின்போரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் எரிவாயு எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment