• பொய்கை அருகே தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்தது.
· பொய்கை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் மீது தனியார் பேருந்து தீப்பற்றி எரிந்தது.
· தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரமாக போராடி தீயை அணைத்தனர்.
வேலூர் மாவட்டம், பொய்கை கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரிலிருந்து வேலூருக்கு ஒரு சொகுசு பேருந்து வந்தது. பேருந்தின் பாகங்களை உடைத்து எடுப்பதற்காக வேலூருக்கு வந்ததை ஓட்டுநர் வினோத்குமார் ஓட்டி வந்தார்.
பொய்கை மேம்பாலம் அருகே வரும்போது திடீரென பேருந்தின் டயர் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநர் வினோத்குமாரை பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை வேக வேகமாக அணைத்தனர். பாலத்தின் மீது பேருந்து தீப்பற்றி எரிந்ததால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மேம்பாலம் மேல் செல்லாமல் அனுகு சாலைக்கு பாதை மாற்றிவிடப்பட்டது.
இது குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி: வினோத்குமார் (பேருந்தின் ஓட்டுநர்)

Comments
Post a Comment