• வேலூரில் நீட் தேர்வு கண்டித்து திக ஆர்பாட்டம்.
· வேலூரில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், நாடு முழுவதும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும் நீட் தேர்வு இனி நடத்த கூடாது என மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் திரளானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினார்கள்.

Comments
Post a Comment