• வேலூர் மாவட்டத்தில் உளுந்து குறைந்த பட்ச ஆதரவு விலை.
· வேலூர் மாவட்டத்தில் உளுந்து குறைந்த பட்ச ஆதரவு விலையில் உளுந்து கிலோ ரூ.78.00/-க்கு கொள்முதல் - மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து விளைபொருளை வேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 100 மெ.டன் மற்றும் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 200 மெ. டன் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 11.05.2026 முதல் 09.07.2026 வரை வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் குறைந்த பட்ச ஆதரவு விலையில் ஒரு கிலோ உளுந்து ரூ.78.00/- விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்துக்கான கிரையத் தொகை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்து உடன் அயல் பொருட்கள் கலப்பு 2%, கலப்பினம், அதிகம் சேதமடைந்த பயறுகள், முதிர்ச்சி அடையாத பயறுகள் 3%, குறைந்த சேதமடைந்த பயறுகள், வண்டுகள் / பூச்சிகள் தாக்கிய பயறுகள் 4%, ஈரப்பதம் 12% இருக்க வேண்டும்.
உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த பயிர்களை நன்கு சுத்தம் செய்து, உலர்த்தி வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்யலாம். முன்னதாக சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பித்துப் பதிவு பெற வேண்டும்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட விவசாயிகள், வேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அவர்களை 7904724564 என்ற எண்ணிலும் குடியாத்தம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அவர்களை 9600310391 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
விவசாயிகளின் விளைபொருளுக்கு இலாபகரமான விலை கிடைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இம்முயற்சியில் விவசாயிகள் முழுமையாக பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment