• வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

·        வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்து, வாகனங்களை ஆய்வு.

வேலூர் மாவட்டம், காட்பாடி, சன்பீம் பள்ளியில் மாவட்டத்தில் உள்ள  தனியார் பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறை மற்றும் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்ததாவது.

                பள்ளி வாகனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு அரசு 2012-லேயே கொண்டு வந்திருக்கிற நம்முடைய இந்த ரூல்ஸின் (Rules) அடிப்படையிலேயே  நம்முடைய மாவட்டத்திலே இருக்கிற 141 பள்ளிகளைச் சார்ந்த 990 வாகனங்கள் இன்றும், நாளையும் இங்கே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது.

                வாகனங்களை ஆய்வு செய்வது மட்டுமல்லாமல், 141 பள்ளி நிர்வாகத்தினரை அழைத்து, சிஇஓ (CEO) மற்றும் வருவாய் துறையை சார்ந்த RDO, ASP. RTO கொண்ட குழுவானது, ஒரு கூட்டம் போட்டு, 'இந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு எங்களுடைய வாகனங்களும், வாகன ஓட்டுநர்களும் செயல்படுவார்கள்' என்பதை ஒரு அண்டர்டேக்கிங்-ஆக (Undertaking) பெற்று கொள்ள வேண்டும். அதேபோல பள்ளி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற, நம்முடைய மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிற ஷேர் ஆட்டோ, தனியார் வாகனங்களை முறைப்படுத்துவதற்கு அடுத்த வாரமே இதற்கு ஒரு கூட்டம்  நடத்த  வேண்டும்.

ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புகள் இங்கே இருக்கிற இந்த பள்ளி வாகனங்களுடைய ஓட்டுநர்களாக இருக்கக்கூடிய சகோதரர்களுக்கு நாங்கள் சொல்லக்கூடியது. நீங்கள் செய்கிற பணியானது மிக மிக மிக பொறுப்பு வாய்ந்த பணி.

ஒவ்வொரு வீட்டினுடைய குழந்தைச் செல்வத்தை, இந்த நாட்டினுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய, எதிர்கால சந்ததியாகிய குழந்தைகளைப் பத்திரமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்லக்கூடிய மிக மிக பொறுப்பான பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணியை நீங்கள் மிகுந்த பொறுப்புடனும், கவனத்துடனும், சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும். சிறு கவனக்குறைவு கூட மிகப்பெரிய ஒரு இழப்பை ஒரு குடும்பத்திற்கு ஏற்படுத்தக்கூடும். அது ஒரு இழப்பாக நமக்குத் தெரியலாம், ஆனால் அந்த குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் ஒரு ஆறாத வடுவாக அமையும். அதனால் மிகுந்த கவனத்தோடு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய பணியை ஆற்ற வேண்டும்."

வாகனத்தை ரிவர்ஸ் எடுக்கும் போது: நீங்கள் வந்து வண்டியை ரிவர்ஸ்ல (Reverse) எடுக்கும் பொழுது, சின்னக் குழந்தைகள் பின்னாடி நின்றால் நமக்குச் சில சமயம் தெரியாது. அதுல ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வண்டிக்கு பின் பகுதியிலே குழந்தைகள் எல்லாரும் ஏறிவிட்டார்களா, யாரு நிக்கிறாங்க என்பதை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல இறக்கிவிட்ட குழந்தைகள் சாலையை கடந்து அவங்களுடைய பெற்றோரோ அல்லது வீட்டில் இருக்கிற யார் கையிலாவது ஒப்படைப்பது வரை ம்முடைய பொறுப்பு.

அதேபோல நம்முடைய பள்ளி வாகனத்தில் வருகிற குழந்தைகள் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என இருபாலர் குழந்தைகளுடைய பாதுகாப்பு, அவர்களை முறையான பாதுகாப்பு உங்கள் கையில் இருக்கு. அதை நீங்கள் முறையாகச் செய்ய வேண்டும். வாகனத்திலே வருகிற ஒவ்வொரு குழந்தையும் நம்முடைய குடும்பத்துக் குழந்தை, நம்முடைய சமுதாயத்தினுடைய குழந்தை, நம்முடைய நாட்டினுடைய எதிர்கால சந்ததி என்பதைப் புரிந்துகொண்டு, மிகுந்த பாதுகாப்பை உறுதி செய்வது உங்களுடைய ஒவ்வொருவர் கையில் இருக்கிறது.

"பள்ளி நிர்வாகத்தாரும் அதைப்போல, சில சமயங்களில் ஓட்டுநரோ இல்ல அவங்களோட அக்கம்பெனிங் (Accompanying) பண்ற அட்டெண்டரோ (Attender) ஒரு நாள் விடுமுறை என்றால், நீங்கள் மிகுந்த பொறுப்போடு உங்கள் பள்ளியிலே இருக்கக்கூடிய நீண்ட நாட்களாகப் பணியாற்றிய, ஒரு ஆல்டர்நேட் டிரைவரையோ (Alternate Driver) அட்டெண்ட்டையோ அனுப்பணும். சில சமயங்களில் இந்த மாதிரி  அவசர நேரத்தில் (Emergency time) செய்கிற சிறு கேர்லஸ் (Careless) விஷயங்கள் கூட மிகப்பெரிய தவறுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.

நம்முடைய பள்ளி நிர்வாகத்தோடு நாம் நடத்துகிற கூட்டத்தில் அந்த விஷயங்கள் எல்லாம். ஸ்டேண்ட்பை டிரைவர் (Standby Driver), ஸ்டேண்ட்பை அட்டெண்டர் (Standby Attender) ஒவ்வொரு ஸ்கூல்லயும் (School) இருக்கணும். ஏதாவது ஒரு ஓட்டுநர் வரல அப்படின்னால், அட்டெண்டன்ட் இல்லைன்னா, அதற்கு அந்தப் பள்ளியிலே அவங்க வந்து, அவங்களுக்கு வேற பணி கொடுத்து அவங்க இருக்கணும். இந்த மாதிரி டைம்ல (Time) வந்து அவங்க இருக்கணும். அதைத்தான் உறுதி செய்ய வேண்டும்.

இங்கே நம்முடைய மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு சிஎம்சி (CMC) இன் சார்பாக நடத்தப்படுகிற கண் சிகிச்சை முகாம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது சிஎம்சி நிர்வாகத்தினருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி (19.05.2026) காட்பாடி சன்பீம்  பள்ளி மைதானத்தில்  தொடங்கி வைத்து, வாகனங்களை ஆய்வு செய்தார்.

                இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி சரியான முறையில் இயங்குகிறதா எனவும், வாகனத்தில் தீயணைப்பு கருவிகள் சரியான நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

                பள்ளி வாகனங்களில் இருக்கை வசதிகள், முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜன்னல்கள், புத்தகப்பை வைக்கும் பகுதி, ஓட்டுநர் இருக்கையை சுற்றி கம்பி வளையம் பொருத்தப்பட்டுள்ளதா  என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

                மேலும் பள்ளி வாகன பக்கவாட்டில் பள்ளியில் பெயர், முகவரி, பள்ளியின் தொலைப்பேசி எண், கைப்பேசி எண் மற்றும் பள்ளியில் போக்குவரத்து பொறுப்பாளரின் பெயர், அப்பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் விவரம், காவல் நிலைய விவரம், புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி ஆகியவை எழுதப்பட்டுள்ளதா எனவும், பள்ளி வாகனத்தின் தரை தளம் முழுமையாக மூடப்பட்டுள்ளதாயெனவும், மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பி நெருக்கமாக உள்ளதாயெனவும்  ஆய்வு செய்தார்.

                மேலும் வாகனத்திலிருந்து இறங்கும்பொழுது படிக்கட்டுகளுக்கும் தரை தளத்திற்கும் இடையேயான இடைவெளி 250 மிமீ இருப்பதை உறுதி செய்து கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.

                 மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து நேரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்உதவி செய்வது குறித்து 108 ஆம்புலன்ஸ் குழுவினரால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள்  செய்யப்பட்டது. 

                வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள இயங்கும் 102 தனியார் பள்ளிகளிலிருந்து 732 வாகனங்கள் வாகன தணிக்கை செய்யப்பட்டு  வருகிறது.

                மேலும் குடியாத்தம் பகுதி அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள 39 தனியார் பள்ளிகளின் 258 வாகனங்கள் 20.05.2026 அன்று   ஆய்வு செய்யப்படவுள்ளது.

                ஆய்விற்கு உட்படுத்தப்படாத பள்ளி வாகனங்கள் ஜுன் 1-ம் தேதிக்குள் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்விற்கு உட்படுத்தி தகுதிச்சான்று பெற வேண்டும். அவ்வாறு தகுதிச்சான்று பெறாத வாகனங்கள் ஜுன் 1 ஆம் தேதிக்கு மேல்  இயக்க அனுமதிக்கூடாது.

இந்த ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, உதவி காவல் கண்காணிப்பாளர் (வேலூர்) தனுஷ்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன்  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.