• அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் விண்ணப்பம்.

·        அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அப்துல்லாபுரம், வேலூரில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சி தலைவர்.

                 தொழிற் கல்வி பெறுவதற்காக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2026 ஆகும்.

கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1.                 FITTER,

2.              ELECTRICIAN,

3.             TURNER,

4.             MACHINIST,

5.             MECHANIC  - MOTOR VEHICLE,

6.             DRAUGHTS’MAN  - CIVIL,

7.               MANUFACTURING PROCESS CONTROL AND AUTOMATION,

8.              INDUSTRIAL ROBOTICS AND DIGITAL MANUFACTURING,

9.             BASIC DESIGNER AND VIRTUAL VERIFIER (MECHANICAL),

10.        ADVANCED CNC MACHINING TECHNICIAN..

கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8 – ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

1.                 WIREMAN,

2.             WELDER,

3.             SHEET METAL WORKER,

4.             WOOD WORK TECHNICIAN,

5.             LEATHER GOODS MAKER.

6.             LEATHER GOODS MAKER.(DST)

7.              LEATHER GOODS MAKER.( Physically challenged)

                14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. இப்பயிற்சி நிலையத்தில் Industry 4.0 நிறுவனத்துடன் சேர்ந்து பயிற்சியாளர்களுக்கு Advanced Training வழங்கப்படுகிறது.

                விண்ணப்பக் கட்டணம் ரூ. 50/- மட்டும் Debit card/ Credit card/ Net Banking/ G-PAY/ Phone pay மூலம் செலுத்த வேண்டும். 

           மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் குறித்த விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

                பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சியாளர்கள் அனைவருக்கும் உதவி தொகை மாதம் ரூ.750/- வழங்கப்படும். மேலும் விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை, காலணிகள், வரைபடக்கருவிகள், இலவச பேருந்து சீட்டு ஆகியன வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் பெற்றுத்தரப்படும். உறுதியான, வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

                www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறும் அல்லது வேலூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் ஐ.டி. (0416-2290848), 9499055676, 9698723464 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (9499055675) ஆகிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொலைபேசி : 0416 – 2290848                                                   email : veliti510@yahoo.co.in

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.