• வேலூர் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள்.
- வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகள்
தமிழ்நாடு அரசால் வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான கீழ்க்கண்டவாறு மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
|
வ.எண் |
விடுதியின் விவரம் |
மாணவர்களுக்கானது |
மாணவியர்களுக்கானது |
|
1. |
பள்ளி விடுதிகள் |
8 |
3 |
|
2. |
கல்லூரி விடுதிகள் |
4 |
3 |
2) பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர் / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டய மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
3) விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Ø அனைத்து விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேலை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
Ø 4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.
Ø 10 ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
4) விடுதிகளில் மாணவர் / மாணவியர்கள் சேருவதற்கான தகுதிகள்
Ø பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
5) தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
6) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 18.06.2026-க்குள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
7) தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழ்ர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment