• வேலூர் மாவட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.

·        வேலூர் மாவட்ட பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.

     வேலூர் மாவட்டம், டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நாள்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, துணைஇயக்குனர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) கலைசெல்வி உட்பட பலர் உடன் இருந்தனர்.

     மேலும் அணைக்கட்டு வட்டம், கந்தனேரி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர் ஜெயக்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.