• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 510 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நலத்துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 510 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற குறை தீர்வு நாள் கூட்டத்தில் மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட 1 மாற்று திறனாளிக்கு ரூ.9,500/- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியும், செவித்திறன் குறைபாடுடைய 1 மாற்று திறனாளிக்கு ரூ.3850/- மதிப்பிலான காதொலி கருவியும் என மொத்தம் 2 மாற்று திறனாளிகளுக்கு ரூ.13,350/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் நல துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டைகளையும், அனைவருக்கும் IIT மெட்ராஸ் திட்டத்தில் மாவட்ட அளவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவன் ஸ்ரீசரனுக்கு அடுத்த நிலையான அடித்தள படிப்பிற்கு கல்வி கட்டணத்திற்காக ரூ.12,000/-க்கான காசோலையை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் கணினி சிட்டாவில் பூஜ்ஜிய பட்டாவாக உள்ள பதிவை திருத்தம் கோரிய மனுவின்மீது நடவடிக்கை மேற்கொண்டு திருத்தம் செய்யப்பட்ட கணினி சிட்டாவை பயனாளிக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், தனித்துணை ஆட்சியர் (முத்திரை தாள்) ரமேஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment