• விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவனூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவர் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி கண்ணமங்கலம் கூட்டு சாலையில் இரு சக்கர வாகனத்தில் தினேஷ்குமார் சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலை தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் படுகாயமடைந்த தினேஷ்குமாரை ராணிப்பேட்டை பூட்டுதாக்கில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தினேஷ்குமார் மூளை சாவடைந்தது. இதனை அடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்த நிலையில் தினேஷ்குமாரின் இருதயம் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை, கல்லீரல் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை, ஒரு சிறுநீரகம் நாராயணி மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.


Comments
Post a Comment