• காட்பாடி திமுக தோல்வி குறித்து கருத்து கேட்பு.


 ·        காட்பாடியில் திமுக தோல்வி குறித்து தொண்டர்களிடையே கருத்து கேட்பு மற்றும் கள ஆய்வு கூட்டம்.

         வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக வடக்கு மாவட்டத்தின் சார்பில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது குறித்து தொண்டர்கள் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு மற்றும் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

     கான்ஸ்டண்ட் ரவிச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் திமுக தொண்டர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை அழைத்து ரகசியமாக அறையுள் வைத்து தகவலை கூறுமாறு அவர்களின் கருத்துக்களை பெயர் பொறுப்புடன் பதிவு செய்தனர்.

    காலை முதல் பகல் வரையில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் கூட்டணி கட்சிகள் சரியாக ஒத்துழைக்கவில்லை, கட்சியினரிடையே ஒற்றுமையின்மை, கிராம பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து சரியாக வாக்குகள் கேட்கவில்லை, திமுக-விற்குள்ளேயே கோஷ்டிகள் இருப்பதால் திமுக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டுமென திமுக-வினரே ஆங்காங்கே பணியாற்றியதாக பெயர் விவரங்களோடு எடுத்துரைத்தனர். இதனால் கருத்து கேட்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.