• வேலூர், விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மையம்.

 

·        வேலூர், விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மையம் - மாவட்ட ஆட்சி தலைவர் திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி, விருதம்பட்டில் புதிய ஆதார் சேவை மையத்தை  மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி திறந்து வைத்தார். 

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), வேலூர் நகரில் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதார் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாக, வேலூர் விருதம்பட்டில் புதிய UIDAI ஆதார் சேவை மையத்தை (ASK) தொடங்கி உள்ளது.

இந்த ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு, மக்கள் தொகை விவரங்கள் மற்றும் உயிர்வள (Biometric) தகவல் புதுப்பித்தல், பிழை திருத்தம், குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இந்த மையம் அரசு பொது விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அதிக வசதியும் மேம்பட்ட சேவை அனுபவமும் கிடைக்கும்.

மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்து, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். மேலும், ஆன்லைன் முன்பதிவு முறை மற்றும் ஆதார் சேவைகள் வழங்கப்படும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

புதிய மையம் குறித்து UIDAI பிராந்திய அலுவலகம், பெங்களூரின் இயக்குநர் பவன்குமார்பவா கூறுகையில், “சென்னை மற்றும் மதுரை, திருநெல்வேலி மற்றும் கிருஷ்ணகிரிக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் ஐந்தாவது ஆதார் சேவை மையம் தற்போது வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2026 செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் கூடுதலாக 25 ஆதார் சேவை மையங்களைத் தொடங்க UIDAI பிராந்திய அலுவலகம், பெங்களூரு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்த ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கும்” என்றார்.

இந்த ஆதார் சேவை மையங்கள் நேரடியாக UIDAI மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் சக்கர நாற்காலி அணுகுமுறை, அணுகலுக்கான கழிப்பறை வசதிகள் மற்றும் தனிப்பட்ட குறைதீர் அமைப்பு போன்ற வசதிகளுடன் இம்மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆதார் சேவை மையத்திலும் ஒரு ASK மேலாளர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகளை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி, விரைவான தீர்வை உறுதி செய்கிறார்.

மேலும், பொதுமக்கள் UIDAI ஆதார் முன்பதிவு தளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆதார் சேவைகளை பெறலாம்:
UIDAI Aadhaar Appointment Portal

5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய உயிர்வள (Biometric) புதுப்பிப்பு சேவை தற்போது 2026 செப்டம்பர் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சேவை பள்ளி முகாம்கள் மற்றும் ஆதார் சேவை மையங்கள் மூலமாக கிடைக்கிறது.

                வேலூர் விருதம்பட்டில் தொடங்கப்பட்டுள்ள ஆதார் சேவை மையம், அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய, திறமையான மற்றும் குடிமக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதார் சேவைகளை வழங்கும் UIDAI-யின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. இது டிஜிட்டல் ஆட்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்தி, இந்திய அரசின் “Ease of Living” மற்றும் நல்லாட்சிக் கொள்கைக்கு துணைபுரிகிறது.

இந்நிகழ்வின்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)  பெங்களுரு மண்டல இயக்குநர் ஸ்ரீபவன்குமார்பவா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.