• வேலூர் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான கடைகளை அகற்ற மனு.

·     வேலூர் ஆற்காடு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இரண்டு அரசு மதுபான கடைகளை உடனே அகற்ற கோரி மதிமுக மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

     வேலூர் மாவட்டம், வேலூர், காகிதபட்டறை, ஆற்காடு சாலையில் பழனி ஆண்டவர் முருகர் கோவில், மசூதி மற்றும் அரசு பள்ளி அருகே இரண்டு அரசு மதுபான கடைகள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும், குறிப்பாக புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால்  இந்த பிரதான சாலையில் உள்ள இரண்டு அரசு மதுபான கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

          இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு சிரமம் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரண்டு அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என மதிமுக மாவட்ட செயலாளர் கோபி மற்றும் அப்பகுதி பொதுமக்களும் இணைந்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு அளித்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.