• மகாத்மா தேசிய வேலை உறுதி திட்ட குறை தீர்ப்பாளர் பணி.
· மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறை தீர்ப்பாளர் பணி.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை திட்டத்தின்) 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்யவும், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்க்கவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மாவட்ட குறைதீர்ப்பாளராக ஆர்.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்.8925811344 மற்றும் மின்னஞ்சல் முகவரி velloreombudsperson@gmail.com. பொதுமக்கள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை குறை தீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியில் புகார்அளிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment