• வேலூர் சுதந்திர தியாகிகள் குறை கேட்பு கூட்டம்.

·        வேலூர் மாவட்ட  சுதந்திர போராட்ட தியாகிகள் குறை கேட்பு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் குறைகேட்பு நாள் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகின்ற 29.05.2026 (வெள்ளி கிழமை) அன்று  பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள "காயிதே மில்லத்" கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து அதன் மீது தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் இந்த குறைகேட்பு கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.