• வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு.

·        வேலூர் மாநகராட்சி  பகுதிகளில்  சுரங்க நடைபாதை, குடிநீர் குழாய் இணைப்பு பணி, கழிவுநீர் நீரேற்று நிலையம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சுரங்க நடைபாதை, குடிநீர் குழாய் இணைப்பு பணி, கழிவுநீர் நீரேற்று நிலையம், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாநகராட்சி, கீரின் சர்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளையும், கழிஞ்சூர் பகுதி தாராப்படவேடு பிரதான குழாயை நீருற்று குழாயாக மாற்றி சீரான குடிநீர் வழங்க குழாய் இணைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து விரிஞ்சிபுரம் பாலாற்றில், இறைவன்காடு தலைமை நீரேற்று நிலையத்தில் ஏற்கனவே உள்ள கிணற்றில் பழுது அடைந்த மின் மோட்டர்கள் மாற்றி 13 கி.மீ தூரம் உள்ள தலையாம்பட்டு நீரேற்று நிலையம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 மி.மீ விட்ட கொண்ட குழாய்களை பகுதி வாரியாக  மாற்றி கூடுதலாக 20 இலட்சம் லிட்டர் குடிநீர் மாநகராட்சிக்குட்பட்ட தாராபடவேடு பகுதிக்கு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் மாங்காய் மண்டி பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கும் பணிகளையும், வசந்தபுரம் பகுதியில் கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளையும், கீரின் சர்க்கிள் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது உதவி காவல் கண்காணிப்பாளர் (வேலூர்) தனுஷ்குமார்,  மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், NHAI கள பொறியாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வை பொறியாளர் நித்தியானந்தன், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் குமரவேல், ராஜேஸ்வரி,  வேலூர் வட்டாட்சியர் பழனி, உதவிபொறியாளர்  கணேசன்  உட்பட பலர்  உடனிருந்தனர்.

 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.