• இராணிப்பேட்டை சாலை விபத்துகளை தடுக்கும் “Single Pole Solar Blinkers”.

 இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் “Single Pole Solar Blinkers” தொடக்க விழா.

     இராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, ஆயுதப்படை தலைமையகம் அருகிலுள்ள சென்னைமும்பை தேசிய நெடுஞ்சாலையில் “Single Pole Solar Blinkers” அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின், தொடங்கி வைத்தார்.

      மேலும், மாவட்டம் முழுவதும் புதிதாக கண்டறியப்பட்ட Accident Hotspot Areas சுமார் 51 பகுதிகளில் இந்த அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.

     இந்த அமைப்புகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை சுடராக செயல்பட்டு, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும், சாலை பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.