• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 657 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை, நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிருவாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நல துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 657 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர், பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பார்வை திறன் குறைபாடுடைய 1 மாற்று திறனாளிக்கு ரூ.1750/- மதிப்பில் உணர்வு கைக்கடிகாரம், இயக்கத்திறன் குறைபாடுடைய 1 மாற்று திறனாளிக்கு ரூ.9,360/- மதிப்பிலான நிற்கும் உதவிச் சாதனம், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1 மாற்று திறனாளிக்கு ரூ.7,300/- மதிப்பில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு நாற்காலி, 1 மாற்று திறனாளிக்கு ரூ.9,500/- மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலி என மொத்தம் 4 மாற்று திறனாளிகளுக்கு ரூ.27,910/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் த.ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment