• விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டு திட்டம்.

·        விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டு திட்டம்.

            2026 தோத்தாபுரி மாம்பழ விவசாயிகளுக்கு ஒரு வரபிரசாதமாக புதிய திட்டமாக விலை குறைபாட்டு இழப்பீட்டு திட்டம் 2026-ஆம் ஆண்டு தோத்தாபுரி மாம்பழப் பருவத்திற்காக. தமிழ்நாடு அரசு விலை குறைபாட்டு இழப்பீட்டு சந்தை இடையீட்டு திட்டத்தை (Price Deficiency Payment - Market Intervention Scheme)  அறிமுகம் செய்துள்ளது. சந்தை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வருவாயை பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

     இத்திட்டத்தின்கீழ், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பயன்பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சந்தை இடையீட்டு திட்டத்தின் கீழ் விலை (MIP) குவிண்டாலுக்கு ரூ.1,545.41/-நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் முன்மொழியபட்ட பற்றாகுறை செலுத்துதல் (ரூ. மெட்ரிக் டன்னுக்கு) சந்தை இடையீட்டு விலையின் 25 சதவீதம் ரூ.3863.525 ஒரு ஹெக்டேருக்கு 7 மெட்ரிக் டன் என்ற அடிப்படையில், அதிகபட்சமாக 2 ஹெக்டேர் நிலத்திற்கு (14 மெட்ரிக் டன் வரை) மட்டுமே இத்திட்டத்தின் பலன் வழங்கப்படும். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள தங்களது தோத்தாபுரி மாம்பழத்தை அரசு அறிவித்துள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 34 பழக்கூழ் நிறுவனங்களில் மட்டுமே (விபரம் இணைக்கப்பட்டுள்ளது) விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

             இத்திட்டத்தின் பலனைப் பெற விவசாயிகள் கட்டாயமாக ஆன்லைன் அல்லது நேரடியாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். குத்தகை விவசாயிகள் நில உரிமையாளரின் அனுமதிக் கடிதம் அல்லது குத்தகை ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து தேவையெனில் கள ஆய்வும் மேற்கொள்வார்கள். (DBT) மூலம் விலை குறைபாட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய விற்பனைக் கூட கண்காணிப்பாளர் யுவராஜ் திருப்பத்தூர் அவர்களின் கைபேசி எண் 7904413817 மற்றும் வேளாண் துணை இயக்குநர் வேலூர் மற்றும் திருப்பத்தூர் கைபேசி எண் 9443584782, 9443546351 எண்ணிற்கு தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே தோத்தாபுரி/ பெங்களுரா / மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Comments