• மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி.


 ·         மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி – வருவாய் கோட்டாட்சியர் துவங்கி வைத்தார்.

          வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    அண்ணா கலையரங்கிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

     இதில் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் உரிய பதில் அளித்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் பயன்பெற வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் வேலூர் வட்டாட்சியர் பழனி மற்றும் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

 

Comments