• விருபாட்சிபுரம் பகுதியில் மின்வெட்டு பொதுமக்கள் சாலை மறியல்.


 ·         விருபாட்சிபுரம் பகுதியில் நள்ளிரவு மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆரணி - வேலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு.

       வேலூர் மாவட்டம், விருபாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்பட்டு மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

     இந்த நிலையில் இரவு மின்சாரம் முழுமையாக வராததால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மின்வாரியத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விருபாட்சிபுரம்  பகுதியில் வேலூர்ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணாவும் வந்து மக்களிடம் பேசி மின்வெட்டு ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

   வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிலவுவதால் ஆங்காங்கே முற்றுகையும், மறியல் போராட்டங்களும் தொடர் கதையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments