அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில், அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காஞ்சிபுரம், ஊவேரியில் செயல்படும் பி.டிலீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1300-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதிமற்றும் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவின் முதல் தொழில்கல்வி நிறுவனத்தை தொடங்கிய பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, சென்னை வேப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, இவ்வறக்கட்டளையின் ந...