• தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

·         தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காட்பாடி ரெட்கிராஸ், ஆர்..சி.டி நிறுவனமும் இணைந்து தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

     தமிழ்நாடு மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில தீயணைப்பு ஆணையத்துடன் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காட்பாடி ரெட்கிராஸ் சங்கம், ஆர்..சி.டி. பாரா மெடிகல் கல்லூரியும் இணைந்து தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி  காட்பாடி காந்திநகர், 8-வது கிழக்கு நெடுஞ்சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் பார்சூன் பார்க் வளாகத்திலிருந்து புறப்பட்டு ஆக்ஸிலியம் கல்லூரி சுற்று சாலை, 8-வது கிழக்கு நெடுஞ்சாலை வழியாக கல்யாண மண்டபம் சந்திப்பு சாலை வரை நடைபெற்றது. 

     இந்த பேரணியை மாநில தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி). சங்கர்ஜிவால் தொடக்கி வைத்தார்.  உறுப்பினர்கள் டாக்டர் .எம்.இக்ரம், கே.பி.சத்யமூர்த்தி, எம்.நமச்சிவாயம், இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி கிளை அவைதலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், அவை துணைதலைவர் ஆர்.விஜயகுமாரி, மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், பி.என்.ராமச்சந்திரன், எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், ஞானவேல், அருள்சுடர், கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஸ்ரப் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

     தீ தடுப்பு நடைமுறைகள், தீ பரவாமல் தடுக்கும் முறைகள், விபத்து காலங்களில்  பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பேரிடர் குறித்த விழிப்புணர் பதாகைகள் ஏந்தியபடி பாரா மெடிகல் கல்லூரியை சார்ந்த 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

        விருதம்பட்டு காவல் ஆய்வாளர் சர்புதீன் தலைமையில் காவலர்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்டோர் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தினர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.