• வேலூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம்.


 ·         வேலூரில் அரசு பள்ளி  ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம்.

·         அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி

     தமிழ்நாடு அரசின் பள்ளிகல்வி துறையும் யுனிசெப் நிறுவனம், மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் குறித்த செறிவூட்டல் (Science, Technology, Engineering and Mathematics - STEM) திட்டத்தை செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளுர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைமுறைபடுத்தபடுகிறது.  

            காட்பாடி, காந்தி நகரில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட கூட்ட அரங்கில், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பயிற்சி   நடைபெற்றது.

     வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா கணித, அறிவியல் உபகரண பெட்டிகளை வழங்கி பயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார். 

   தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். பயிற்சி  திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் .அரவிந்த் பயிற்சியின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் வெளியீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் .சுப்பிரமணி செய்முறை பயிற்சிகள் குறித்து விளக்க உரையாற்றினார்.  மாவட்ட தலைவர் முத்துசிலுப்பன், வானவில் மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் .விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.

      பயிற்சி கருத்தாளர்கள் பி.ரவீந்திரன், அனிதா, மரியஜான், நிலவழகி, லித்தியம்,  அருண்குமார் காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர் இணை ஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வநாதன் பி.சுகுமாரன்  ஆகியோர் பயிற்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.

 வேலூர் மாவட்டத்திலிருந்து 75 அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

     தமிழ்நாடு அரசின் புதுமையான திட்டமாக ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் மைய ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அளவில் வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளுர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் 500 ஆசிரியர்கள் தேர்தெடுக்கப்பட்டு கணித, அறிவியல் உபகரண பெட்டிகள் வழங்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் எளிமையான முறையில் கணிதமும் அறிவியல் கற்கும் திறன் மேம்படும் என மாநில ஒருங்கிணைப்பாளர் .அரவிந்த் கூறினார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.