• ரிவேரா கலை விழா மாரத்தான் போட்டி.

·         ரிவேரா கலை விழா மாரத்தான் போட்டி.  

·         4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

     வேலூர்: வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் ரிவேரா 2026 கலை விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

     விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இன்று தொடங்கி மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.

     இதன் ஒரு பகுதியாக விஐடி பல்கலைகழக வளாகத்தில் பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

     விஐடி துணைதலைவர் சேகர் விசுவநாதன் கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.‌

     இதில் 2,700 மாணவர்கள், 1,200 மாணவிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

     விஐடி பல்கலைகழக வளாகத்தில்  தொடங்கிய மாரத்தான் போட்டி  சேவூர் வரை சென்று மீண்டும் விஐடி பல்கலைகழகத்தில் நிறைவடைந்தது.‌ சுமார் 10 கி.மீ. தொலைவு கொண்ட மாரத்தான் போட்டியில் மாணவர்கள் பிரிவில் இஷான் முதல் இடத்தை பிடித்தார். பாஸ்கர் இரண்டாம் இடத்தையும், பிரணாய் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

    மாணவிகள் பிரிவில் ஆயுஷி ஜெயின் முதல் இடத்தை பிடித்தார். பொன்மணி 2-ம் இடத்தையும், மரியா 3-ம் இடத்தையும் பிடித்தார். உடற்கல்வி இயக்குநர் மங்கையர்கரசி அருண் மற்றும் ரிவேரா ஒருங்கிணைப்பாளர் பெல்வின் எட்வர்ட் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று மாலையில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெறும் ரிவேரா தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பரிசுகளை வழங்க உள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.