• வேலூர் மாவட்ட மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டம்.
· வேலூர் மாவட்ட மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 438 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி , மின்சாரத் துறை சார்பான குறைகள் , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை . மருத்துவத் துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 438 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசா