• வேலூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் இலவச வேட்டி, சேலை.

·        வேலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் இலவச வேட்டி, சேலை பெற்று பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

            வேலூர் மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு தீபாவளி-2024 பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் இலவச வேட்டி, சேலை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.  இதன்படி வேலூர் மாவட்டத்தில், ஆண்கள்-37,258 மற்றும் பெண்கள்-95,922 ஆக மொத்தம் 1,33,180 பயனாளிகள் உதவித்தொகை பெற்று வரும் நபர்களில் ஆண் பயனாளிக்கு ஒரு வேட்டியும் மற்றும் பெண் பயனாளிக்கு ஒரு சேலையும்  29.10.2024 முதல் பயனாளிகள் உணவுப் பொருள்கள் பெற்று வரும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது.

                வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி மற்றும் சேனூர் கிராமங்களில் நியாய விலைக் கடைகளில் நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் 29.10.2024 அன்று துவக்கப்படவுள்ளது.

                வேலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற நியாயவிலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் / மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் இலவச வேட்டி, சேலை பயனாளிகளுக்கு வழங்கப்படும். எனவே, வேலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் இலவச வேட்டி, சேலை பெற்று பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.