Posts

• தெலுங்கு வருட பிறப்பு.

Image
·          தெலுங்கு வருட பிறப்பு.      · வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான மையம் மற்றும் ஜலகண்டீஸ்வரர் ஆலயங்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள்        ·          நவதானியங்களால் மகாவிஷ்ணு கோலம் வரையப்பட்டு   பக்தர்கள் சாமி தரிசனம்.           வேலூர் மாவட்டம் , வேலூர் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள், வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் நவதானியங்கள், காய்கறிகளை கொண்டும், மகாவிஷ்ணு உருவம் கோலமாக வரையப்பட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.          இதேபோன்று வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாள் சன்னைதியில் சிறப்பு அபிஷேகங்கள் செய்த...

• ரூ.100 கோடியில் மேல்அரசம்பட்டு அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

Image
·          ரூ . 100 கோடியில் மேல்அரசம்பட்டு அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்       · பாலாற்றின் குறுக்கே பள்ளிகொண்டாவில் ரூ . 48 கோடியில் புதிய தடுப்பணையை கட்டி ஏரிகளுக்கு நீரை திருப்பும் வகையில் அமைக்கப்படும் - அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூரில் பேட்டி.        வேலூர் மாவட்டம் , வேலூரில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,       நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய சுமார் ரூ . 4 ஆயிரம் கோடி பணத்தை உடனடியாக ஏழை மக்களுக்காக வழங்கிட வேண்டும். மேலும் நூறு நாள் வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு ரூ .17 உயர்த்தியதை வரவேற்கிறேன்.       தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்யகூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநிலத்தில் இ...

• ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா.

Image
·          ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா.             ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .          இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார் . இதை தொடர்ந்து முதல் நிகழ்வாக வேலூர் பிரீத்தா சண்முகசுந்தரம் மற்றும் , ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினர் .              இதை தொடர்ந்து அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை செயலாளர் மற்றும் ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லம் தலைவர்            J. லட...

• வண்டறந்தாங்கல் ஊராட்சியில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணி.

Image
·         காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வள துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். காட்பாடி வட்டம், வண்ட்றந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அறிவுசார் மையத்தின் சிறப்பம்சங்கள்             இந்த அறிவுசார் மையம் 203.90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது . இதில் ஆண்கள் , பெண்களுக்கு தனித்தனியே கழிவறை மற்றும் சமைய ல றை க் கூடம் கட்டப்படவுள்ளது .         இப்பணியானது தொடங்கப்பட்டு அடுத்த 4 மாத காலத்திற்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் .                 இந்த அறிவுசார் மையத்தின் மூலம் வண்ட்றந்தாங்கல் , அண்ணாநகர் , வண்ட்றந்தாங்கல் காலனி , இந்திரா நகர் , பு...