• ரூ.100 கோடியில் மேல்அரசம்பட்டு அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்.
· ரூ.100 கோடியில் மேல்அரசம்பட்டு அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும்
· பாலாற்றின் குறுக்கே பள்ளிகொண்டாவில் ரூ.48 கோடியில் புதிய தடுப்பணையை கட்டி ஏரிகளுக்கு நீரை திருப்பும் வகையில் அமைக்கப்படும் - அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூரில் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூரில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய சுமார் ரூ.4 ஆயிரம் கோடி பணத்தை உடனடியாக ஏழை மக்களுக்காக வழங்கிட வேண்டும். மேலும் நூறு நாள் வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு ரூ.17 உயர்த்தியதை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்யகூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநிலத்தில் இருமொழி கொள்கையைதான் கடைபிடிப்போம். கல்வித் துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய தொகையை அளிக்காமல் காலம் தாழ்த்துவது மாணவர்களின் கல்வியை தடுக்கும் வகையில் உள்ளது. எனவே உடனடியாக மத்திய அரசு கல்விக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் உள்ள தொகையை வழங்கிட வேண்டும்.
மேல்அரசம்பட்டு அணை முதற்கட்ட ஆய்வு பணி முடிந்துள்ளது. அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. விரைவில் அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும். இதன்மூலம் அப்பகுதி மக்கள் பயன் பெறுவார்கள். பாலாற்றின் குறுக்கே 10 புதிய தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக பள்ளிகொண்டா அருகே ரூ.48 கோடியில் புதிய தடுப்பணை உருவாக்கப்பட்டு பாலாற்றில் எப்போது தண்ணீர் வந்தாலும் அவை ஏரிகளுக்கு செல்லும் வகையில் இந்த தடுப்பணையானது அமையவுள்ளது.
மத்திய சுற்று சாலை பணிகளும் வேகமாக நடைபெறுகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றாலும் வேலூரின் போக்குவரத்து குறையும். வேலூர் நகரின் பாதாள சாக்கடை பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது. விரைவில் நகரம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும்.
விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெறும் என்று கூறினார். பேட்டியின்போது முகமது சகி, மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment