• ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா.

·         ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா.

            ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் குழந்தைகள் பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

         இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். இதை தொடர்ந்து முதல் நிகழ்வாக வேலூர் பிரீத்தா சண்முகசுந்தரம் மற்றும், ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றினர்.

            இதை தொடர்ந்து அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை செயலாளர் மற்றும் ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லம் தலைவர்           J.லட்சுமணன் மற்றும் வேலூர் ருக்ஜி ஜீவல்லர்ஸ் உரிமையாளர், அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை உறுப்பினர், BMD ஜெயின் பள்ளி செயலாளர், மருதார் கேசரி ஜெயின் காலேஜ் உறுப்பினர் ருக்ஜி K.ராஜேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர்.

            நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் வேலூர் சரகம், சிறை துறை துணை தலைவர் (DIG) சண்முகசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது வாழ்த்துரையில், மாணவர்கள் ஆகிய நீங்கள் வருங்காலத்தில் மிக பெரிய பதவிகளை வகிக்க போகிறீர்கள். பெற்றோர்கள் நீங்கள் உங்கள் பிள்ளைகளை தினமும் அவர்களது செயல்களை பாராட்டுங்கள், அவர்களை ஊக்குவியுங்கள், மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்து K.G. மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். பின்பு பள்ளி மாணவர்களின் ஆண்டு விழாவும், கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் நடைபெற்றது.

          இந்நிகழ்ச்சிக்கு பள்ளி அகாடமிக் பொறுப்பாளர் K.பிரமிளா, பள்ளி முதல்வர் G.தண்டபாணி, நர்சிங் கல்லூரி முதல்வர் C.S.சிவசக்தி, பள்ளி துணைமுதல்வர் கோமதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

        இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தாளாளர் கோமதி பாலாஜி, இணைசெயலாளர் செல்வி B.வைஷ்ணவி, அகாடமிக் இயக்குநர் மஞ்சுநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.