• வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 மற்றும் 2 ல் ஆய்வுக் கூட்டம்.

· வேலூர் மாநகராட்சி, மண்டலம் 1 மற்றும் 2 ல் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி, மண்டலம் 1-ல் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மண்டலம் 1-ல் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் 13 சாலை பணிகள், 24 பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார். மண்டலம் 1 இல் உள்ள 15 வார்டுகளுக்கு 14 MLD அளவு குடிநீர் விநியோகம் செய்ய நிர்ணயிக...