• குடியாத்தம் இராஜகோபால் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
· குடியாத்தம் இராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவய்ப்பு முகாம் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் (TANSAM) இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகிற 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று குடியாத்தம் இராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளது. இந்நிறுவனங்களுக்கு CIVIL ENGINEERING, ELECTRICAL ENGINEERING, IT PROFESSIONALS, SKILL PROFESSIONALS (Welder, Fitter, Plumber, Electrician) AND HOTEL MANAGEMENT ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலைநாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.
ஆகவே. தனியார் துறை பணிகளுக்கு தகுதியும். விருப்பமும் உள்ள நபர்கள் வருகின்ற 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை குடியாத்தம் இராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment