• வேலூரில் தமிழக வெற்றி கழகம் ஆர்பாட்டம்.
· வேலூரில் மத்திய அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்பாட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மேற்கு மாவட்ட தொண்டரணி பொறுப்பாளர் இம்தியாஸ் உள்ளிட்டோரும் திரளான தமிழக வெற்றி கழகத்தினரும் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Comments
Post a Comment