வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் மனித நேயமும் சேவை மனப்பான்மையும் கருத்தரங்கம்
வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் மனித நேயமும் சேவை மனப்பான்மையும் கருத்தரங்கம் வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் அமைப்பும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து மனித நேயமும் சேவை மனப்பான்மையும் கருத்தரங்கம் இன்று 26.11.2025 கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரியின் முதல்வர் எ.ஆரோக்கிய ஜெயசீலி தலைமை தாங்கினார். நிகழ்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் அமலா வளர்மதி முன்னிலை வகித்தார். பேராசிரியர் வி.கங்கா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியரும் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்று யூத் ரெட்கிராஸ் கையேட்டினை வழங்கி மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். உலகில் வாழக்கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்த...