வாசகர்கள் விரும்பி படித்து மகிழ்வது இதழ்களையா?, நூல்களையா சிறப்பு பட்டிமன்றம்
![]() |
· வேலூர் மாவட்ட நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா
· நூலகத்திற்கு வரும் வாசகர்கள் விரும்பி படித்து மகிழ்வது இதழ்களையா?, நூல்களையா சிறப்பு பட்டிமன்றம்
· நூலக தந்தை எஸ் ஆர் ரங்கநாதனின் புத்தகம் படிப்போம் புதிய உலகம் படைப்போம் பொன்மொழியை பின்பற்றுவோம் - முனைவர் கவிஞர் ச.லக்குமிபதி
வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் 58வது தேசிய நூலக வர விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மைய நூலக அலுவலர் (பொறுப்பு) கு.இரா.பழனி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நூலகர் ஜெ.ரவி முன்னிலை வகித்து பேசினார். நூலகர் க.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சு.ஸ்ரீதரன் கலந்து கொண்டு பட்டிமன்ற விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் கவிஞர் எஸ்.கே.எம்.மோகன், தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மிகவும் விரும்பி படித்து மகிழ்வது இதழ்களையா?, நூல்களையா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு முனைவர் கவிஞர் ச.லக்குமிபதி நடுவராக இருந்தார்.
இதழ்களே என்ற தலைப்பில் பேராசிரியர் பொன். செல்வக்குமார், கவிஞர் ராஜன்பாபு, நூல்களே என்ற தலைப்பில் ஆர்த்தி, அச்சிதா ஆகியோர் பேசினர்.
இந்த பட்டிமன்றத்தில் இருதரப்பினரில் வாகனங்களை கூர்ந்து கவனித்து தகுந்த பொருள் உரைகளுடன் பட்டிமன்ற நடுவர் முனைவர் கவிஞர் ச.லக்குமிபதி சுவைபட பேசியதாவது
நூலகத்தில் வாசகர்களுக்கு இதழ்களும் நூல்களும் இரண்டும் முக்கியமானவை இதில் வாசகர்களுக்கு எது மகிழ்ச்சியையும் விருப்பத்தையும் கொடுக்கிறது நூலகத்தில் உள்ளே நுழைந்தவுடன் இதழ்கள் நம்மை வசீகரிக்கிறது வரவேற்கிறது இதழ்களை வாசித்தவுடன் நமக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைப்பது உறுதி.ஆனால் அத்தனை ஈடுபாட்டோடு அல்லது முழு அர்ப்பணிப்போடு அந்த இதழ்களை வாசிக்கிறோமா என்பதில் தான் ஐயப்பாடு உள்ளது.
ஆன்மீகம் அரசியல் தத்துவம் விஞ்ஞானம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் ஜோதிடம் விளையாட்டு போன்று பல்வேறு தளங்களில் களங்களில் நடந்திருக்கும் அப்டேட்ஸ் மற்றும் நேற்று நடந்தது வரையிலான தகவல்களை தரக்கூடியது இதழ்கள். சிரிப்பு, சிறுகதைகள் தொடர்கள் வாசகர்களை சுண்டி இழுக்கும் படிக்கப் படிக்க இன்பமும் ஒருவிதமான ஆறுதலும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கான பல குறிப்புகளும் இதழ்களில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது பல்வேறு இதழ்களில் தொடர்கதைகளாக வந்தவைகள் தான் பின்னாளில் பல நூல்களாக உருவெடுத்து இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
கல்கண்டு கல்கி கலைமகள் அமுதசுரபி ஆனந்த விகடன் குமுதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் மஞ்சரி கலைக்கதிர் கூரியர் போன்ற இதழ்கள் எண்ணற்ற வாசகர்களின் இதயத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பதை மறுக்க முடியாது இதழ்கள் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியும் இன்பமும் விருப்பமும் நெடுநேரம் இருப்பதில்லை கொஞ்ச நேரம் படித்துவிட்டு அந்த நேரம் அனுபவித்து விட்டு ஓடி விடும் மேகத்தைப் போல நாம் பறந்து விடுகிறோம்/இதழ்களை பார்த்து நாம் குறிப்பெடுப்பதும் இல்லை மிகவும் ஆழ்ந்தும் படிப்பதில்லை இதழ்கள் அறிவை கொடுத்தாலும் நூல்களுடைய வாசிப்பு அப்படி இல்லை நூல்களை வாசிக்கின்ற வாசகர்கள் அதை கட்டிப்போட்டு விடுகிறது வரலாற்று நூல்கள் தன்னம்பிக்கை நூல்கள் நெடுங் கதைகள் ஆய்வு நூல்கள் பக்தி நூல்கள் கவிதைகள் தொகுப்பு முன்னேறியவர்களின் அனுபவங்கள் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இப்படி எண்ணற்ற நூல்கள் நூலகம் முழுக்க நம்மை அணைத்துக் கொண்டு அரவணைத்துக் கொண்டு புதியதோர் உலகம் படைக்க வழிகளை படைத்து காட்டுகின்றன.
நூல்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத வீடு என்பது பழமொழி.வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம் என்றார் பேரறிஞர் அண்ணா.ஆகவே நூல் நிலையத்திற்கு வந்து தான் வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதில்லை ஒவ்வொருவரும் முடிந்த அளவிற்கு தங்கள் வீடுகளிலேயே கூட நூல்களை சேமித்து வைக்க பழக வேண்டும் நம்மால் முடியும் என்கின்ற நம்பிக்கையை நூல்கள் தருகின்றன அப்போது மனசுக்குள் இனம் புரியாத இன்பமும் மகிழ்ச்சியும் ஒரு துள்ளலும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது .awareness attitude action இந்த மூன்றும் நமக்குத் தேவை என்று ஒரு நூல் நமக்கு சொல்லித் தருகிற போது நாம் ஏன் முயலக் கூடாது என்கிற தைரியம் நமக்குள் வருகிறதுஅதற்குப் பிறகு நம்மாலும் சாதிக்க முடிகிறது
அதனால்தான் பில்கேட்ஸ் கூட தான் படிக்கின்ற போது நூலின் பக்கத்தில் ஓரத்தில் பென்சிலில் குறிப்பெடுத்து எழுதி வைத்து பின்பு வாசிப்பாராம் இன்று உலகில் முன்னேறி இருக்கின்ற 80% எல்லோரும் புத்தக வாசிப்பு மூலம் பயனடைந்தவர்களே ரூட்ஸ் என்கிற புத்தகம் ஒபாமாவை மாற்றியது. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற ரஸ்கின் புத்தகம் மகாத்மாவின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு நூலுக்குள்ளும் ஒரு சக்தி இருப்பதை நாம் உணரலாம். படிக்கிற வாசகனுக்கு அந்த நூல் ஒருவித புது சக்தியை தர ஆரம்பிக்கிறது.
நாமும்வெற்றி பெற்றுவிட்டோம் என்ற சின்ன மகிழ்ச்சியை அது தருகிறது/ அதுதான் உண்மையான மகிழ்ச்சி. இதழ்களைப் படித்து முடித்தவுடன் அதன் தொடர்ச்சியாக நூல்களை வாசிக்க வருகிற வாசகர்கள் தான் அதிகம்.எனவே நூலகத்திற்கு இதழ்களும்முக்கியம் நூல்களும் முக்கியம் என்றாலும் நூல்களை வாசிக்க வேண்டும் என்பதற்காகவே நூலகம் என்று பெயர் இருக்கிறது புத்தகம் படிப்போம் புதிய உலகம் படைப்போம் என்று தான் நூலக தந்தை எஸ் ஆர் ரங்கநாதன் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.எனவே நூலகத்திற்கு வருகின்ற வாசகர்களுக்கு அதிகமான மகிழ்ச்சியும் படிக்கின்ற ஆர்வத்தையும் அதிக மன நிறைவும் தருவது இதழ்களை விட நூல்களே நூல்களே என்று தீர்ப்பளிக்கின்றேன்/தீர்ப்பில் உடன்பாடு இல்லை எனில் மேல்முறையீடு செய்து கொள்வோம் இந்த பட்டிமன்றம் அனுமதிக்கிறது வாசகர்கள் விரும்பி படிப்பது நூல்களே என கவிஞர் ச.லக்குமிபதி தீர்ப்பளித்தார்.
கவிஞர் அப்துல்ரகுமான் எழுதிய 'தேவகானம்' என்ற நூலை தமிழாசிரியை அருளரசி அறிமுகப்படுத்தி பேசினார். முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், கவிஞர் எஸ்.கே.எம். மோகன் ஆகியோர் மாவட்ட நூலக அலுவலர் பழனியிடம் தலா ரூ.ஆயிரம் கொடுத்து புரவலர்களாக இணைந்தனர்.
விழாவில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ரத்தினம், ஆசிரியர் ஞான.சக்திவேலன், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நூலகர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

Comments
Post a Comment