• வேலூர் மாவட்டபொது விநியோக திட்ட குறை தீர்வு முகாம்.
· வேலூர் மாவட்டத்தில் 14.02.2026 இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 14/02/2026 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் க...