• ஊரீசு கல்லூரி 41-ஆவது பட்டமளிப்பு விழா.


 ·         ஊரீசு கல்லூரி 41-ஆவது பட்டமளிப்பு விழா - வி.ஐடி வேந்தர் விசுவநாதன் மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்

             வேலூர் மாவட்டம், வேலூரில் மிகவும் பழமை வாய்ந்த ஊரீசு கல்லூரி உள்ளது. வேலூர் சி.எஸ். நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரீசு கல்லூரியின் 41-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் டிபோர் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் ஜெயகரன் ஐசக் உள் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

          இந்த விழாவிற்கு ஊரீசு கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளருமான  வேலூர் பேராயத்தின் பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார். வி.ஐடி கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு  விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

  இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ஆனிகமலாஃப்ளோரன்ஸ், கல்லூரியின் நிதியாளுநர் பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்  காலேப்நோபுள்சந்தர் உள்ளிட்டோரும் திரளான மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.  

          இந்தப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 951 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி