• வேலூர் மாவட்டபொது விநியோக திட்ட குறை தீர்வு முகாம்.

·        வேலூர் மாவட்டத்தில்  14.02.2026  இரண்டாவது  சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

                   பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 14/02/2026 ஆம் தேதி இரண்டாவது  சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,  புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல்,  குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.

வ.எண்

நாள்

வட்டம்

உள்வட்டம்

கிராமம்

1.

14.02.2026

அணைக்கட்டு

ஊசூர்

அத்தியூர்

2.

14.02.2026

குடியாத்தம்

குடியாத்தம் கிழக்கு

அரிகவாரிபல்லி

3.

14.02.2026

கீ.வ.குப்பம்

வடுகந்தாங்கல்

அங்காரகுப்பம்

4.

14.02.2026

காட்பாடி

காட்பாடி

வஞ்சியூர்

5.

14.02.2026

பேர்ணாம்பட்டு

மேல்பட்டி

மேல்கொத்தகுப்பம்

6.

14.02.2026

வேலூர்

பென்னாத்தூர்

காட்டுபுத்தூர்

                    எனவே,  பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் சிறப்பு குறை தீர்வு முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் ஒளி நகலுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி  தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி