• வேலூரில் வருவாய் துறை சங்கங்கள் மறியல் போராட்டம்.


 ·         வேலூரில் வருவாய் துறை சங்கங்களின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் - 400-க்கும் மேற்பட்டோர் கைது.

   வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை தீனதயாளன் துவங்கி வைத்தார்.

     இதில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் "சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை" உடன் இயற்ற வேண்டும்.

        வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும்.

           கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் "சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை" உடன் இயற்ற வேண்டும்.

   அரசுப் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை இரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும்.

          பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும்.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத் துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளி முகமை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.

            பொது மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அனைத்து காலி பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதிதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது, குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும். வருவாய் துறையின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, விரைவான போக்குவரத்து வசதிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாத நிலையில், பேரிடர் காலங்களை தவிர மற்ற காலங்களில் கிராம நிருவாக அலுவலர்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியம் வகையில் தமிழ்நாடு அமைச்சு பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி மறியல் போரடடம் செய்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பேட்டி: ரமேஷ்  (வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்)

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி